Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
5 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை விவரம்; தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜி.ரவிக்குமார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஏ.உஷா ஆகியோர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக கே.அமுதவள்ளி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜி.ஜோசப் ராஜ், உதகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக மனோஹரி ராமச்சந்திரன் ஆகியோர் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT