Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
புதுச்சேரி மாநிலத்தில் இரட்டை நிர்வாகத் தலைமை அமைப்பு முறையை மாற்ற வேண்டும் என காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளர் எஸ்.பி.செல்வசண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, காரைக்காலில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
புதுச்சேரிக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது வரவேற்கத்தக்கது. அதேபோல, காரைக்கால்- பேரளம் அகல ரயில்பாதை திட்டப் பணிகளையும் விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியில் குழப்பமான ஆட்சி நடைபெற்று வந்தது. துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் என்ற இரு நிர்வாக அமைப்புகளுக்கு இடையேயான பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த இரட்டை நிர்வாக அமைப்பு முறையை உடனே மாற்றி, ஒரே நிர்வாக தலைமை அமைப்பு முறையை ஏற்படுத்தப்பட மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொடர்ந்து புதுச்சேரியால் புறக்கணிக்கப்பட்டு வருவதால், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT