Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை

காரைக்கால்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர் சங்கத் தலைவர் ஜி.ஸ்டீபன், செயலாளர் பி.இளங்கோவன் ஆகியோர், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

மத்திய அரசின் அறிவிப்பின்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அரசின் கீழ் செயல்படும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தினக் கூலிகளாக பணியாற்றி வரும் 49 ஊழியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கவனம் செலுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x