Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM
பிரதமர் நரேந்திரமோடி புதுச் சேரிக்கு நேற்று காலை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று திரண்டனர். பின்னர், கருப்பு பலூன்களை பறக்கவிட்டு, பிரதமருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
போராட்டத்துக்கு, மமக மாவட்டத் தலைவர் ராஜா முகம்மது தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற 30 பேரை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT