Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM

லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் கைது

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கட்டிட திட்ட அனுமதி பெற ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் நேற்று கைது செய்யப் பட்டார்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர், புதிய பேருந்து நிலையம் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கான கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்காக, நாஞ்சிக்கோட்டை சாலையில் கல்லுக்குளம் அருகேயுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு அண்மையில் சென்றார். அங்கு, திட்ட அனுமதி கொடுப்பதற்காக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் ஆர்.நாகேஸ்வரன் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் கண் காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலகத் தில் ஆனந்த் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரையின்படி, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்ற ஆனந்த், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை நாகேஸ்வரனிடம் வழங்கினார். அதை நாகேஸ்வரன் பெற்றுக்கொண்டபோது, மறைந்திருந்த தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் மற்றும் போலீஸார், நாகேஸ்வரனை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, திருச்சி காட்டூர் விக்னேஷ் நகரிலுள்ள நாகேஸ்வரனின் வீட்டிலும் திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x