Published : 26 Feb 2021 03:16 AM
Last Updated : 26 Feb 2021 03:16 AM
தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில்ரூ.42 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 8 வழிச்சாலை பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகச் சாலையில் அனல்மின் நிலைய ரவுண்டானா அருகே இருந்த நான்குவழிச் சாலை பாலம் மற்றும் அதனையொட்டியுள்ள ரயில்வே மேம்பாலம்ரூ.42 கோடியில் 8 வழிச்சாலை பாலமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்தப் பாலத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
துறைமுகத்தில் ரூ.20 கோடியில் 5 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட தரைதள சூரிய மின்சக்தி ஆலை அமைக்கும் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி துறைமுகம் அருகேநடைபெற்ற விழாவில் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன், துணைத் தலைவர் பிமல்குமார் ஜா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மற்றும் துறைமுகத்தின் அனைத்து துறைத் தலைவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சூரிய மின் சக்தி ஆலை திட்டம் மூலம் ஆண்டுக்கு 80.64 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். துறைமுகத்தின் 60 சதவீத மின் தேவையை இத்திட்டம் பூர்த்தி செய்யும்.வரும் ஆகஸ்ட் மாதம் இத்திட்டம்நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT