Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

மூன்று நாட்களுக்கு பால் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

திருப்பூர்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், திருப்பூர் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் மதிவாணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன், ‘கறவை மாட்டுப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் பால் மதிப்புக்கூட்டுப் பொருட்கள்‘ எனும் தலைப்பில், வரும் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மூன்று நாள் பயிற்சி நடைபெறுகிறது.

கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் பசும்பாலின் உட்பொருட்கள், பால் உருவாதல், பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டு பொருட்களின் வகைகள், பால் மதிப்பு கூட்டுப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் இதர செயல் முறை குறித்து விளக்கம் அளிக்கப்படும். பயிற்சியின் இறுதி நாளில், அருகில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பங்கேற்பவர்களுக்கு மூன்று நாட்களுக்கு காலை, மாலை சிற்றுண்டி, மதிய உணவு, பயிற்சி சான்றிதழ், குறிப்புப் புத்தகம் ஆகியவை தரப்படும். இப்பயிற்சிக்கு 30 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு அவசியம். தொடர்பு கொள்ளும் முதல் 30 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்பதிவுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x