Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
புவனகிரி அருகே வடகிருஷ்ணா புரத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து பனை விதைகள் நடும் பணியை நேற்று தொடங்கினர்.
வடகிருஷ்ணாபுரம் ஊராட்சி யில் சாலையோரங்கள், வாய்க் கால்களின் கரை, காலியான திடல்கள் என அனைத்துப் பகுதிகளில் மண்ணுக்கு வளம் சேர்க்கும், நீராதாரத்தை பாதுகாக்கும் பனை விதை நடப்பட்டது. அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், " கிராமத்தில் பல்வேறு மரக்கன்றுகள், செடிகளை இதற்கு முன்பு பராமரித்து வந்த போது அவை சேதமடைந்தன. நீராதாரத்தை காப்பதில் பனைமரம் மிகுந்த முக்கியத்துவம் வகித்து வருவதால் பனை விதை நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஊர் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது எங்களின் முயற்சிக்கு கிடைத்த ஆங்கீகாரமாக நினைக்கிறோம். பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT