Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந் ததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூ பிக்கும்படி நாராயணசாமி அரசுக்கு பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்த ரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த திங்கள்கிழமை பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார். அப் போது, அவர் மத்திய அரசு மற்றும் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாக சாடினார். பின்னர் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறவில்லை என பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் அரசு கவிழ்ந்தது. பின்னர் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.
தேர்தல் நெருங்கும் இறுதிக்கட்டத்தில், நடந்திருக்கும் இப்பிரச்சினை புதுவை அரசியலில் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியிருக்கிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கடைசி 2 மாதங்களுக்காக ஆட்சியமைக்க உரிமை கோருவதால் எந்த ஆதாயமும் இல்லை. அதன்மூலம், காங்கிரஸ் தரப்பே அனுதாபத்தை சம்பாதிக்கும். எனவே, தேர்தலை முறையாக சந்திப்பதில் கவனம் செலுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர்.
அதிமுக, பாஜக நிலைப்பாடு
இதேபோல் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க விருப்பமில்லை என்றும் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளோம் என்றும் பாஜகவின் புதுச்சேரி தலைவரும் நியமன எம்எல்ஏவுமான சாமிநாதனும் அதிமுக பேரவைத் தலைவர் அன்பழகனும் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியை இழந்த காங்கிரஸ் தரப்பும் நடப்புச் சூழலை எப்படி எதிர்கொள்வது என விவாதித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தங்கள் கூட்டணிக் கட்சியினருடன் அறவழிப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதனிடையே அடுத்ததாக ஆட்சி அமைக்க இதுவரை எந்தக் கட்சியும் உரிமை கோரவில்லை. இந்த சூழலைக் கருத்தில்கொண்டு, மத்திய உள்துறை யால் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ஏற்றார்
இதற்கிடையே நாராயணசாமி மற் றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதை, அவர் ஏற்றுக் கொண் டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு, புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனி குமாரால் புதுச்சேரி மாநில அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அம லானால் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். தமிழகத்தோடு சேர்த்து புதுவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.
அதேநேரம் ஏற்கெனவே தேர்தல் ஆணையம் திட்டமிட்டபடி தமிழகத்தோடு இணைந்து புதுச்சேரிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் உள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த அறிவிப்புக்கு பின்னரே அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT