Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
தி.மலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை அமைச்சர்கள் வாழ்த்தினர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேவூர் எஸ்.ராமச்சந்திரன் - மணிமேகலை தம்பதியின் இளைய மகன் ஆர்.விஜய குமாருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த எம்.கே.கிரிராஜன் – உமா மகேஸ்வரிதம்பதியின் மகள் மருத்துவர் ஜி.மீனதர்ஷினிக் கும் தி.மலை மாவட்டம் ஆரணி புறவழிச்சாலை யில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமீன், தொழிலாளர் நலத்துறைஅமைச்சர் நிலோபர்கபீல், தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், கதர்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்ரமணியன், சோமசுந்தரம், புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், தூசி. கே.மோகன், நடிகை நளினி உட்பட பலர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சென்னை பார்த்தசாரதி கோயில், ரத்தினகிரி சுப்ரமணியர் கோயில், படைவீடு ரேணுகாம்பாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் இருந்து மலர் மாலை மற்றும் பிரசாதம் ஆகியவை மணமக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, திருமண விழாவுக்கு வந்தவர்களை ஆர்.சந்தோஷ்குமார், எஸ்.ஸ்வர்ணாம்பிகா மற்றும் அத்திவரதர் ஆகியோர் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT