Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நடைபயணம் மேற்கொண்டனர்.
மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ஏகாம்பவாணன், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் சேகர், வட்டார தலைவர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபயணத்தை, கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தொடங்கி வைத்தார். ஒலப்பட்டி இணைப்புச் சாலையில் தொடங்கிய நடைபயணம், கெரிக்கேப்பள்ளி கேட் வழியாக சாமல்பட்டியில் நிறைவடைந்தது. இதில் நிர்வாகிகள் அக.கிருஷ்ணமூர்த்தி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். முன்னாள் எம்பி தீர்த்தராமன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT