Published : 21 Feb 2021 03:20 AM
Last Updated : 21 Feb 2021 03:20 AM

ஆசிரியர் பணி நியமனத்துக்கு நியமன தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கோரிக்கை

திருச்சி

தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நியமன தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை படிப்படியாக பணியில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற் றோர் நலச் சங்கத்தின் மாநில ஒருங் கிணைப்பாளர் ம.இளங்கோவன், மாநிலத் தலைவர் சு.வடிவேல் சுந்தர் ஆகியோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த 2012-ல் அறிமுகப்படுத்தப் பட்டு இதுவரை நடத்தப்பட்ட 5 ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஏறத்தாழ 1 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றும், கடந்த 8 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாததால் எங்களது வாழ் வாதாரத்தை இழந்து வருகிறோம்.

இது தொடர்பாக எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் பல முறை நேரில் அளித்து வலியுறுத்தி உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதம், மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி யும் தீர்வு கிடைக்கவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு கடந்த காலங்களில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், முதல்வர் பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை.

மேலும், ஏற்கெனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு என மற்றொரு தேர்வை எழுதச் சொல்லி வற்புறுத்துவது மிகுந்த மன உளைச்சலை தருகிறது.

எனவே, நியமனத் தேர்வை ரத்து செய்து விட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு படிப்படியாக பணி வழங்க வேண்டும். இதற் கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என்றனர். பேட்டியின்போது அருண் குமார், பிரகாஷ், உள்ளிட் டோர் உடனிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x