Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது, எல்.ஐ.சி., யின் பங்குகளை விற்பது, ஒரு அரசு இன்சூரன்ஸ் கம்பெனியை விற்பது ஆகிய முடிவுகளை எதிர்த்து நேற்று அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பினர் அறிவித்திருந்தனர். அதன்படி கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு நேற்று மாலை, 75 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி செயலாளர் பொன் மகாராஜா, இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் ஹரிராவ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT