Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM
திருப்பூர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும்வேலை தேடும் இளைஞர்கள், 18 முதல் 50 வயதுடையவர்கள் அனைவரும் அஞ்சல் துறையின் சிறுசேமிப்பு திட்ட முகவராக தகுதியுடையவர்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் எனில் 65வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். இதற்கான நேர்காணல் திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய விவரங்களுடன் பங்கேற்கலாம். சம்பளம் கிடையாது. பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT