Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM

கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் பிரார்த்தனை

பாளையங்கோட்டையில் தூய சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி நிறைவேற்றினார். இத்திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் இடப்பட்டது. (அடுத்த படம்) தூத்துக்குடி திரு இருதயங்கள் பேராலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு வழிபாட்டில் இறைமக்கள் நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிடும் ஆயர் ஸ்டீபன் ஆண்டகை. படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

கிறிஸ்தவ ஆலயங்களில் தவக் காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்துவின் பாடு களை தியானிக்கும் வகையில் ஆண்டு தோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்கால மாக அனுசரிக்கிறார்கள். இவ்வாண்டுக் கான தவக்காலம் நேற்று தொடங்கியது. இதை யொட்டி, சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை ஆலயங் களில் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் தூய சவேரியார் பேராலயத்தில் காலை 6 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி நிறைவேற்றினார். கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. பங்குத்தந்தை ராஜேஷ், உதவி பங்குத்தந்தையர் மிக்கேல், பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர். இதுபோல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங் களிலும் சாம்பல் புதன் பிரார்த் தனைகள் நடைபெற்றன.

இதை தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் 1-ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை கொண் டாடும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி சின்னக்கோயில் எனப்படும் திருஇருதய பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை பங்கேற்று சாம்பல் மூலம் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டார்.

இதேபோல தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசிவிட்டார். தூத்துக்குடி புனித அந்தோனியார் திருத்தலம், லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயம், யுதா ததேயு திருத்தலம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

நாகர்கோவில்

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சாம்பல் புதன் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நடந்த சிறப்பு திருப்பலி, ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, இவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை குறியிட்டார். கன்னியாகுமரி, மார்த் தாண்டம், தக்கலை, குளச்சல், கருங்கல், குலசேகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள், சி.எஸ்.ஐ. தேவாலயங்கள், இரட்சணியசேனை, ஜெபக் கூடங்கள் ஆகியவற்றில் தவக் காலம் நேற்று தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x