Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருகளத்தூர் பாமணி ஆற்றங்கரையில் 2014-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சோமசுந்தரம்(40), தனது நண்பர்கள் தாயுமானவன்(45), ராஜேந்திரன்(46) ஆகியோருடன் சேர்ந்து தேக்கு மரம் ஒன்றை வனத்துறையின் அனுமதியின்றி வெட்டி, கடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மன்னார்குடி வனத் துறை அலுவலகம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மன்னார்குடி 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதில், செருகளத்தூரைச் சேர்ந்த சோமசுந்தரத்துக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.7,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், உடந்தையாக இருந்த தாயுமா னவன், ராஜேந்திரன் ஆகியோருக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT