Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM

நுகர்பொருள் வாணிபக் கழக கணக்கில் ரூ.34.55 லட்சம் மோசடி வங்கி ஊழியர் மீது வழக்கு பதிவு

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகப் பணப் பரிவர்த்தனைகள் அப்பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி மூலம் நடக்கிறது.

இந்த வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை தனியார் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு ராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடப்பதை நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் கண்டறிந்து பொதுத் துறை வங்கிக்கு தெரிவித்தனர்.

அதனையடுத்து பொதுத்துறை வங்கியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பரமக்குடி காந்திசிலை பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவர் கூட்டுறவு வங்கியில் வரவு வைக்க அனுப்பப்படும் வரைவோலை, காசோலைகளில் முறைகேடு செய் ததைக் கண்டறிந்தனர்.

நுகர்பொருள் வாணிபக்கழக கணக்கில் வரவு வைக்க கூட்டுறவு வங்கிக்கு கொண்டு செல்லும் வரை வோலை, காசோலைகளில் சிலவற்றை கடந்த 2014 முதல் 17.11.2019 வரை சிறிய சிறிய தொகையாக தனது உற வினர்களின் பெயர்களில் மாற்றி ரூ. 34.55 லட்சம் முனியசாமி முறைகேடு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து முதுகுளத்தூர் பொதுத்துறை வங்கியின் முதுநிலை மேலாளர் ரவீந்திரன் மாவட்ட எஸ்.பி. இ.கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் முனியசாமி மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசா ரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x