Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM
தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் டி.என்.சி. சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 32-வது கிளை திருவண்ணாமலை யில் தொடங்கப்பட்டுள்ளது.
வேங்கிக்கால்-இந்திரா நகர் மேற்கு பகுதியில் உள்ள ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.என்.சி. இளங்கோவன் தலைமை தாங்கினார். இயக்குநர்கள் மீனா இளங்கோவன், பிரேம், சினேகா, விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தீபக் மணிவண்ணன், நிறுவனத்தின் மண்டல செயல் தலைவர்கள் விவேகானந்தன், பார்த்திபன், பிரித்திவிராஜ், பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு, டி.என்.சி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 32-வது கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் முதல் சீட்டு தொகையை வாடிக் கையாளர்களுக்கு வழங்கினார்.
விழாவில், தொழிலதிபர்கள் கே.ராஜா, எம்.மண்ணுலிங்கம், டாக்டர் சி.கே. அசோக்குமார், டாக்டர் பி.இந்திரராஜன், ஏ.கே. மோகன்ராஜ் பாரதி, என்.சின்ராஜ் அண்ணாமலையார் கோயில் அர்ச்சகர் பி.டி.ரமேஷ் குருக்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மண்டல பொறுப்பாளர் அருண் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT