Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM

பிரதமர் மோடியின் வருகையை கண்டித்து திருச்சியில் மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது

திருச்சி

பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, திருச்சியில் நேற்று கருப்புக் கொடியேந்தி, கருப்பு நிற பலூன்களை பறக்கவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மகஇக மாவட்டச் செயலாளர் ஜீவா, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ரகு, புமஇமு அரிச்சந்திரன், மக்கள் உரிமை கூட்டணி ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது, மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு, பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மறுப்பு, அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தி, சம்ஸ்கிருதம் திணிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x