Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM
திண்டிவனத்தில் கடந்த 8-ம் தேதி பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் தாக்கி ரூ. 25 ஆயிரம் பணத்தை கொள்யைடித்த விவ காரத்தில், 3 இளைஞர்களை திண்டிவனம் போலீஸார் நேற்றுக் கைது செய்து, அவர்களிடமிருந்து ரொக் கம் மற்றும் ஆயுதங்களைக் கைப் பற்றினர்.
திண்டிவனத்திலுள்ள மரக்கா ணம் சாலை சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில், கடந்த 8-ம் தேதி அதிகாலை பணியிலிருந்த செந்தில்குமார் (38), நல்லாவூரைச் சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோரை தாக்கிய மர்ம கும்பல், ஊழியர் களிடமிருந்து ரூ.27 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது குறித்து திண்டிவனம் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதி காலை திண்டிவனம் டிஎஸ்பி கணசேன் மேற்பார்வையிலான போலீஸார் மரக்காணம் கூட்டு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி யில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த 3 பேரை மடக்க முயன்ற போது, அவர்கள் அங்கி ருந்து தப்பிக்க முயன்றனர். இதை யடுத்து போலீஸார் தப்பிச் சென்ற நபர்களை விரட்டிச்செல்லும் போது, பைக்கில் சென்ற நபர் கீழே விழுந்து காயமடைந்ததில் ஒருவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் மூவரையும் பிடித்து, விசாரணை நடத்தினர். சென்னை சேலையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லோகநாதன் மகன் நவீன்முத்து பாண்டியன் (22), மாடம்பாக்கத்தை சேர்ந்த ரவி மகன் தரணிகுமார் (25), சேலையூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கணேசன்(20) என்ப தும், 3 பேரும் திண்டிவனம் பெட் ரோல் பங்க்கில்,ரூ. 27 ஆயிரம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடை யவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களது பைக் ஆவணங்களை சரிபார்த்த போது, மாற்று பதிவு எண்ணைக் கொண்டு பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது சேலையூர் காவல் நிலையில் வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
மாற்று பதிவு எண்ணைக் கொண்டு பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT