Published : 14 Feb 2021 03:20 AM
Last Updated : 14 Feb 2021 03:20 AM
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கரூரில் பிப்.21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வி.செந்தில் பாலாஜி பவுண்டேஷன்ஸ் சார்பில், பிப.21-ம் தேதி கரூர் திருகாம்புலியூரில் உள்ள ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்நிறுவனங்களில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட பணிகளை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்ய லாம்.
10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரி வரை பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.vsenthilbalajifoundationss.com என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக் கலாம். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் நேரிலும் விண் ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற் கும் விண்ணப்பதாரர்களுக்கு அடுத்து திமுக ஆட்சி அமையும்போது, தகுதி அடிப்படையில், அரசுப் பணி வழங்க பரிசீலிக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT