Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM

பொக்காபுரம் கோயில் தேரோட்டம் ரத்து

உதகை: நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா வரும் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடக்கிறது.

இந்தாண்டு கரோனா பரவலை தடுக்கும்பொருட்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி திருவிழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

அவர் கூறும்போது, ‘‘இந்தாண்டு திருவிழாவில் தேரோட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. தோளில் சுமந்து அம்மன் திருவீதி உலா நடைபெறும். பூஜைகள், வழிபாடுகள் வழக்கம்போல நடைபெறும். சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

எனவே வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சேவார்த்திகள் மற்றும் நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சேவார்த்திகள் தேங்காய், பழம் ஆகியவற்றை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும். கோயிலுக்கு அருகில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தங்குதல், தற்காலிக கடைகள் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. கரகம் எடுத்து வருபவருடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x