Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM

டிடிவி தினகரன் குறித்தப் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்: சி.வி.சண்முகம்

கள்ளக்குறிச்சி

“டி.டி.வி.தினகரன் குறித்து நேற்று முன்தினம் நான் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நான்கூறியதை தவறாக கருதியிருந் தால், அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மினி கிளினிக் திறப்பு நிகழ்ச் சிக்காக நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வந்தி ருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் நேற்று (நேற்று முன் தினம்) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தினகரன் குறித்து கருத்துதெரிவிக்கையில், அவரது ‘குலத்தொழில்’ என்ற வார்த்தையை பயன் படுத்தினேன். அதற்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது.

‘குலத்தொழில்’ என்று சொன்னது அவரது குடும்பத் தொழில். எங்கள் பகுதியில் அவ்வாறுதான் கூறுவோம். அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன். ஆனால், அதை திரித்து, ஏதோ ஒரு சமுதாயத்துக்கு எதிராக நான் கருத்து கூறியதாக அவர் (தினகரன்) அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

எனக்கும், டிடிவி தினகரனுக்கும் சில அரசியல் பிரச்சினைகள் இருக்கும். கருத்து சொல்லும்போதும், நையாண்டி கேலி செய்யும்போது, நேரிடையாக கருத்து சொல்லி வருகிறோம். எந்தச் சூழலிலும் யாரையும் எப்போதும், மனம் வருத்தப்படும்படியாக நான் பேசுவது கிடையாது. அந்த எண்ணம் எனக்கில்லை.

இன்னும் சொல்லப்போனால், நான் 10 ஆண்டு காலம் மதுரையில் படித்தவன். எனக்கு அதிகப்படியான நண்பர்கள் இருப்பது மதுரையில்தான். நான் கூறியதை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தவறாக எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், நான் அதற்காக மனப்பூர்வமாக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை, அந்த குடும்பம் குறித்து தான் பேசினேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x