Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில், அணையின் நீர்மட்டம் நேற்று 48.85 அடியாக சரிந்தது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததாலும், கெல வரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு குறைவாக உள்ளதாலும், கடந்த 2-ம் தேதி முதல் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.
பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று காலை அணையின் நீர்மட்டம் 48.85 அடியாக குறைந்தது.
அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக வலது மற்றும் இடதுபுறக் கால்வாய் வழியாக 162 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT