Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM

காஞ்சியில் 5 வட்டங்களில் நாளை குடும்ப அட்டை குறைதீர் முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் நாளை (பிப்.13) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டை தொடர்புடைய குறைகள் பரிசீலிக்கப்படும். மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை இணைத்தல் தொடர்பான பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.

இந்த குறைதீர் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் நடைபெறும். காஞ்சிபுரம் வட்டத்தில் வளத்தோட்டம், பெரும்புதூர் வட்டத்தில் பால்நல்லூர், உத்திரமேரூர் வட்டத்தில் அரசாணிமங்கலம், வாலாஜாபாத் வட்டத்தில் வெள்ளேரியம்மன் கோயில், குன்றத்தூர் வட்டத்தில் கொல்லச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x