Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM
உயர்மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர்ந்து 22 நாட்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் நேற்று மாலையுடன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள படியூரில் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கப்பட்டது.
இதில், உயர்மின் வழித்தடத் திட்டத்தை சாலை ஓரமாக புதைவடமாக (கேபிள்) அமைக்க வேண்டும்.இத்திட்டத்தையும், இந்திய தந்தி சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 22-ம்நாளாக நேற்றும் தொடர்ந்த போராட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர். தமிழக மின்சாரத் துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, நேற்று மாலையுடன் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 8-ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் படியூர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம், மதுரைமாவட்டம் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த தொடர் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT