Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM

ரூ.3 லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர்

ஊத்துக்கோட்டையில் இரு கார்களில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 கார்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஊத்துக்கோட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாரின் சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட அந்த புகையிலை பொருட்களை ஆந்திர பகுதியில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

புகையிலை பொருட்கள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்த ஊத்துக்கோட்டை போலீஸார் சத்ராராம், லட்சுமண் ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x