Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM

மாரியம்மன் கோயில் 5-ம் ஆண்டு விழா பிறந்த நாள் கேக் வெட்டிய பக்தர்கள்

குள்ளனூர் மாரியம்மன் கோயில் 5-ம் ஆண்டு திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடுத்த படம்: கோயிலில் அம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வைக்கப்பட்டிருந்த கேக்.

கிருஷ்ணகிரி

குள்ளனூர் மாரியம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினர்.

போச்சம்பள்ளி அருகில் உள்ள குள்ளனூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

கோயில் கட்டப்பட்டு 5-ம் ஆண்டு நேற்று தொடங்கியதை யொட்டி, திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பம்பை மேளங்கள் முழங்க அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து கோயிலில் 5-ம் ஆண்டு விழாவையொட்டி, அம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வகையில் கேக் வெட்டி பக்தர்கள் கொண்டாடினர். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x