Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பள்ளி மற்றும் உயர் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவரும் விஐடி பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள கோரிக்கை யில், ‘‘2021-22 பட்ஜெட் கூட்டத் தொடரில் கல்விக்கு ஒதுக்கிய நிதி ரூ.93,224 கோடி. கடந்த ஆண்டு 2020-21-ல் கல்விக்கு 99,311 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒதுக்கிய நிதியில் 6 சதவீதம் குறைந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் வாக்குறுதி அளித்தபடி மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு சற்று அதிக அளவில் நிதி ஒதுக்கியி ருக்கலாம் என கல்வியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடப்பாண்டில் ரூ.6 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. இது தேசிய கல்விக் கொள்கை செயல் படுத்தப்பட்ட முதல் ஆண்டில் இவ்வாறு நடைபெற்றது ஊக்கப் படுத்துவது போல் இல்லை.
கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ள சூழ்நிலையிலும் கூட சுகாதாரம் மற்றும் உள்கட்ட மைப்பு துறைகளுக்கு அதிகப் படியான நிதி ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் கரோனா காலத்தில் பள்ளிப் படிப்பை பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த நிலையை மாற்றி அனைவரும் கல்வி கற்க அதிகப்படியான நிதியை ஒதுக்க வேண்டும்.
தற்போது, அறிவித்துள்ள பட்ஜெட் டின்படி தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத் துவதற்கு போதிய வழிவகை இல்லை. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்து வதற்கு பள்ளி மற்றும் உயர் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும், மத்திய பள்ளிக் கல்வித்துறை 15-வது நிதி ஆணையத்துக்கு அளித்துள்ள அறிக்கையின்படி 2021-2025 ஆண்டுகளில் ரூ.1.14 டிரில்லியன் தேவைப்படுகிறது’’ என தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT