Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM
கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணத்தையே நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கிடைத்துவரும் இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அது எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. போராடும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT