Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மடமேடு பகுதியைச் சேர்ந்தவர் வி.வீரம்மாள் (90). கணவர் இறந்துவிட்டார். வீரம்மாளுக்கு மணி என்ற மகன், பழனியம்மாள் (50) என்ற மகள் இருந்தனர். மணி திருமணமாகி குடும்பத்துடன் அருகே வசித்து வருகிறார். கணவர் இல்லாத நிலையில், தாயாருடன் வசித்து வந்தார் பழனியம்மாள். பழனியம்மாளுக்கு ஒரு கை, கால் செயலிழந்த நிலையில், அவரை வீரம்மாள் பராமரித்து வந்தார். வீரம்மாளும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். தனக்கு பிறகு மகளை யாரும் கவனிக்கமாட்டார்கள் என்ற கவலையில் வீரம்மாள் இருந்துள்ளார். வறுமையும் பிரச்சினையாக இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்து தாயார் வீட்டின் கதவை மணி திறந்து பார்த்தபோது, வீரம்மாள் மற்றும் பழனியம்மாள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு வெள்ளகோவில் போலீஸார் சென்று, சடலங்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x