Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM

பருவ மழை தாமதத்தால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒட்டன்சத்திரம் திமுக எம்.எல்.ஏ. மனு

திண்டுக்கல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அர.சக்கரபாணி எம்.எல்.ஏ.

திண்டுக்கல்

வட கிழக்குப் பருவமழை தாமதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி மனு அளித்தார்.

இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

ஒட்டன்சத்திரம் பகுதியில் மானாவாரியாக 36 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், வெள்ளை சோளம், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்திருந்தனர்.

வடகிழக்குப் பருவமழை தாமதத்தால் இவை முற்றிலும் காய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயப் பரப்பு குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறைகள் மூலம் கணக்கெடுத்து மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கல் குவாரிக்கு எதிர்ப்பு

பழநி அருகே சரவணம்பட்டியில் விளை நிலங்கள் உள்ள பகுதியில் புதிதாகக் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவாரி அமைக்கப்பட்டால் விவசாயம், குடிநீர், குடியிருப்பு கள் பாதிக்கப்படும்.

எனவே கல்குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள் ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x