Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

மண் சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் 3-வது நாளாக மீட்புப் பணி தீவிரம்

காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே மண் சரிந்து விபத்து ஏற்பட்ட கல்குவாரியில் மண் குவியலை அகற்றும் பணி 3-வது நாளாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள மதூர் கல்குவாரியில் 2 நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது. இதில் வாலாஜாபாத் நத்தாநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன்(25), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனுஅன்சாரி(24) ஆகியோர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.

கடந்த 2 நாட்களாக சரிந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணிநடைபெற்றது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இந்தப் பணியில்தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல்குவாரியின் மீது கொட்டப்பட்டிருந்த மொத்த மண்ணும் அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் சரிந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

3-வது நாளாக நடைபெற்ற மீட்பு பணியில் மண் சரிவுக்குள் சிக்கி இருந்த 5 வாகனங்கள் மீட்கப்பட்டன. 4 பொக்லைன் இயந்திரங்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x