Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 5-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, மறியலில் ஈடுபட்டதாக, திருச்சியில் மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 134 பேரும், கரூரில் மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் 85 பேரும், புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமையில் 35 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல, பெரம்பலூரில் மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில் 47 பேரும், அரியலூரில் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமையில் 42 பேரும், தஞ்சாவூரில் மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி தலைமையில் 100 பேரும், நாகையில் மாவட்டச் செயலாளர் அன்பழகன் தலைமையில் 53 பேரும், மயிலாடுதுறையில் மாவட்டத் தலைவர் இளவரசன் தலைமையில் 50 பேரும் மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT