Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM
பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்ற இந்திய ஜனநாய கக் கட்சியின் தலைவரும், பெரம் பலூர் தொகுதி எம்.பி.யுமான பாரி வேந்தர் (எ) பச்சமுத்து அளித்த பேட்டி:
கூட்டுறவு விவசாய கடன்களை ரத்து செய்யத் தூண்டியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அச் செயலை செய்து முடித்ததற் காக தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்துக்கு விடிவைத் தரும். நல்ல திட்டங்கள் கிடைக்கும். அரசியல் மாற்றம் நடந்தே தீரும் என்றார்.
இக்கூட்டத்தில், பார்க்கவ குல மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இச்சங்கத்தின் தலைவராக சத்தியநாதன், பொதுச் செயலாளராக வெங்கடேசன், பொருளாளராக ராஜூ ஆகியோர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இதே பதவியில் தொடர பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT