Published : 06 Feb 2021 03:17 AM
Last Updated : 06 Feb 2021 03:17 AM
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மூலதன மானிய உதவித்தொகை மூலம் பெறப்பட்ட வேளாண் உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பாக உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மூலதன மானிய உதவித்தொகை மூலம் பெறப்பட்ட வேளாண் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து வேளாண் உபகரணங்களை வழங்கினார். அப்போது ஆட்சியர் பேசியதாவது:
கரோனா நோய் தொற்று காலத்தை எதிர்கொள்ளும் வகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் பெற மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் டிராக்டர், தாமோதரஹள்ளி, பெண்ணேஸ்வரமடம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் ரேட்டாவேட்டர் கருவி, சின்னதிம்மிநாயனப்பள்ளி உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வாட்டர் டேங்க், கால்வேஹள்ளி குழுவுக்கு பவர் டில்லர் என மொத்தம் 4 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT