Published : 06 Feb 2021 03:17 AM
Last Updated : 06 Feb 2021 03:17 AM
தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி அடுத்த காடுவெட்டி, திருவள்ளூர், மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து, திருவள்ளூர், மீஞ்சூர் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, முதல்வர் பிரச்சாரம் செய் யும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT