Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 03:17 AM
கள்ளக்குறிச்சி குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றிட தனியார் மற்றும் தன்னார்வ அமைப்பினரின் பங்களிப்பை கள்ளக் குறிச்சி நகராட்சி நிர்வாகம் கோரி யுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் சுடுகாட்டுக்கு அருகிலேயே குப்பைக் கிடங்கு உள்ளது. நகர்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கிடங்கிலும், அதன் சுற்றுப் புறத்திலும் கொட்டப்படுகிறது. இதனால் சடலத்தை புதைக்கவோ, எரியூட்டவோ எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பலர் புகார் அளித்த நிலையிலும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை.
இந்த நிலையில் ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த் திக்கேயன் கடந்த மாதம் குப்பைக் கிடங்கு மற்றும் சுடுகாட்டுக்குச் செல் லும் பாதையில் குவிந்திருந்த குப் பைகளை தனது சொந்த செலவில் இயந்திரம் கொண்டு அகற்றினார்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம், தூய்மைப் பாரத திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து,அவற்றை உரமாக்கும் உற்பத்திநிலையம் அமைக்க திட்டமிட்டுள் ளது.
குப்பைகள் குவிவதால் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை இருப்பதாக கூறிவந்தது.
இப்பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் குமரன் தலை மையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தன்னார்வ மற்றும் தனியார் அமைப்புகளின் கருத்துக் கேட்புக் கூட்டமும் நேற்று நடைபெற்றது. அப்போது நகராட்சி ஆணையர் குமரன் பேசியது:
நகராட்சிக் குப்பைக் கிடங்கில் உர உற்பத்தி கூடத்தை அமைக்க ஏதுவாக, தற்போது அங்குள்ள குப்பைகளை அகற்றி அதை வேறு இடத்தில் சேமித்து வைக்கவேண்டும். சேமித்து வைக்கப் பட்டுள்ள குப்பைகளை பாதுகாக்கும் வகையில் சுற்று வேலி அமைக் கவும், சுடுகாட்டுப் பகுதியில் பூங்கா அமைக்கவும் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது.
இந்த பணிகளை தன்னார்வ அமைப்பினர் எடுத்து செய்ய முன் வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அரிமா மற்றும் ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்ட சில தனி நபர்களும் பணிகளை செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து ஒன்றரை ஆண்டு களில் குப்பைக் கிடங்கில் உர உற்பத்திக் கூடம் அமைத்த பின் மீண்டும் குப்பைகளை அங்கேயே கொட்டி உரமாக்கப் படும் என்று ஆணையர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT