Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
தமிழக மீனவர்கள் 4 பேர் கொல் லப்பட்டதற்கு இலங்கை அரசிடம் இந்தியா கடும் கண்டனம் தெரிவித் துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளியை சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண் டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய நான்கு பேர் கடந்த ஜன.18-ம் தேதி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே ஜன.19-ம் தேதி அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர் களை விரட்டனர். அப்போது கடற் படையின் கப்பல், தமிழக மீனவர் களின் படகு மீது மோதியது. இதில், 4 மீனவர்களும் கடலில் மூழ்கினர். 2 நாள் தேடுதலுக்குப் பிறகு 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம், தமிழக மீனவர் களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசி யல் கட்சித் தலைவர்களும் இலங்கை ராணுவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவ காரத்தை மாநிலங்களவையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் நேற்று எழுப்பினர். திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, ‘‘தமி ழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் மீனவர்கள் தங்கள் தொழிலை மாற்றும் நிலைக்கு கட்டாயப்படுத் தப்பட்டு உள்ளனர். தமிழக மீன வர்கள் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நம் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர், தனது கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும். இப்பிரச்சினையை மிகவும் தீவிரமாக கையாண்டு, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
245 மீனவர்கள்
அதிமுக சார்பில் பேசிய தம்பி துரை, ‘‘சிவாவுடன் இணைந்து இப்பிரச்சினையை நானும் கண்டிக் கிறேன். தற்போது கொல்லப்பட்ட 4 பேரையும் சேர்த்து இதுவரை 245 தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட் டுள்ளனர். இந்திய, இலங்கை கடல் பகுதியில் மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. இப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமியும் கடிதம் எழுதியுள் ளார்’’ என்றார்.இதற்கு பதிலளித்த வெளியு றவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘இப்பிரச்சினையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மீன வர்கள் கொல்லப்பட்டது குறித்து இந்தியாவின் கடுமையான கண் டனத்தை இலங்கை அரசிடம் பதிவு செய்துள்ளோம். இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்க முடியாத செயல் என அந்நாட்டிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
இதையடுத்து, மாநிலங்களவை தலைவரான குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, ‘‘மீனவர்கள் பிரச்சினை என்பது நீண்டகாலமாக உள்ளது. அதற்காக இதில் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அர்த்த மல்ல. அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்களால் முடிந்தவரை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனினும், இதற்கு தீர்க்கமாக ஒரு முடிவுகட்ட வேண்டும் என்பதே இந்த அவையின் உறுப்பினர்களது பரிந்துரையாகும். இதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT