Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, ஆணையர் க.சிவக்குமார் தலைமை வகித்தார்.
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தார். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டப் பணிகள்மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அவ்வப்போது மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை தேங்காத வண்ணம், இரவு நேரங்களில் அவற்றை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் அடைப்புகளை உடனடியாக சரி செய்து, போக்குவரத்துக்கு இடையூறின்றி பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும்.
தெருவிளக்குகள் 100 சதவீதம் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாநகர பொறியாளர் ரவி, மாநகர் நல அதிகாரி, உதவி ஆணையர்கள், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தினர், இரண்டாவது குடிநீர் திட்ட செயற்பொறியாளர், சுகாதார அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT