Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, உடுமலைப்பேட்டையை சேர்ந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.பரமசிவம் அனுப்பியுள்ள மனுவில், "தமிழகத்தில் விவசாயி களுக்கு இயந்திரப் பயன்பாட்டுக்காக, அரசால் எஸ்எம்ஏஎம் திட்டத்தில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி 2002-21-ம் ஆண்டு ஒதுக்கீடு உத்தரவை, கடந்த 22-ம் தேதி வெளியிட்டுள்ளனர். இதில், டிராக்டர் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்துக்கு மிகக் குறைந்த அளவே மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 700 பேர் பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். ஆனால், திருப்பூர் மாவட்டத்துக்கு ரூ.75 லட்சத்து 65 ஆயிரம் என, 21 பேருக்கு தான் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பதிவு செய்து 698 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஈரோடு மாவட்டத்துக்கு, 106 பேருக்கு ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்த நிதியை, தமிழக வேளாண்மை பொறியியல் துறைதான் ஒதுக்கீடு செய்துள் ளது. மாவட்டத்துக்கு, மாவட்டம்பாரபட்சமாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயிகள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் மானியத் திட்டம் சமமாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இணையதளம் வழியாக பதிவு செய்துள்ளவர்களுக்கு, காத்திருப் போர் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT