Published : 31 Jan 2021 03:15 AM
Last Updated : 31 Jan 2021 03:15 AM

218 காவலர்களுக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர்களாக சேர்ந்து, தண்டனை இல்லாமல் 10 ஆண்டுகளாக பணியாற்றிய, 164 இரண்டாம்நிலைக் காவலர்கள், முதல் நிலைக் காவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர். அதேபோன்று, 5 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 54 முதல்நிலைக் காவலர்கள், தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிப்.1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவர்கள், தற்போது பணியாற்றும் இடத்திலேயே பதவி உயர்வுடன் பணியாற்றுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x