வரதராஜ பெருமாள் கோயிலில்  தெப்ப உற்சவம் நிறைவு

வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் நிறைவு

Published on

காஞ்சிபுரம் நகரப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் ‘அனந்த சரஸ்’ எனப்படும் புஷ்கரணியில் உலகப் புகழ் பெற்ற அத்திவரதர் சயனித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 28-ம் தேதி முதல் என 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், 3-ம் நாளான நேற்று இரவு,புஷ்கரணியில் அமைக்கப்பட் டுள்ள அலங்கார தெப்பலில் பெருந்தேவி தாயார் மற்றும் தேவி, பூதேவியருடன் வரத ராஜ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், தீர்த்தக் குளத்தில் 7 சுற்றுகள் தெப்பலில் வரதராஜ பெருமாள் வலம் வந்தார். கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் குளத்தில் இறங்கத் தடை விதிக்கப்பட்டது. எனினும், கரையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை செயல் அலு வலர் தியாகராஜன் தலைமை யிலான கோயில் பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in