Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

மணி ஒலித்து விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

திருப்பூர்

காங்கயம் அருகே 10-வது நாளாக விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நேற்றும் தொடர்ந்தது.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் வழித்தட திட்டத்தை சாலையோரம் புதைவடமாக (கேபிள்) அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூரில் உயர் மின்கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10-வது நாளாக நேற்று தொடர்ந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி மணி ஒலித்தும், பாத்திரங்கள் மூலமாக ஒலி எழுப்பியும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x