Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM

குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் வழிகாட்டி கையேடு வெளியீடு

கிருஷ்ணகிரியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தயாரிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் வழிகாட்டி கையேட்டை, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் வழிகாட்டி கையேட்டை ஆட்சியர் வெளி யிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தயாரிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் வழிகாட்டி கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. கையேட்டை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டார்.

இந்த கையேட்டில், பெண் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கான காரணங்கள், குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்கள், மனரீதியான துன்புறுத்தலால் குழந்தைகள் அடையும்பாதிப்புகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல், புறக்கணித்தல், பாகுபாடு, குழந்தைகடத்தல்,சுரண்டல், குழந்தை தொழிலாளர்கள் அடையும் பாதிப்புகள், குழந்தை திருமணத் தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் சிசுக்கொலை, கருக்கொலை மற்றும் நெருக்கடி காலநிலைகள் (இயற்கைபேரழிவு) குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, ஊராட்சி உதவி இயக்குநர் ராஜசேகர் உட்பட அலுவலர்கள் உடனிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x