Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் சரிவு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவைக்காட்டிலும், பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து குறைவான அளவு நீர் திறக்கப்படுவதாலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 71 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய் வழியாக 2-ம் போக சாகுபடிக்கு விநாடிக்கு 134 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி. அணையின் நீர்மட்டம் தற்போது 50.80 அடியாக குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x