Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

தேனி நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தேனி நகராட்சி அலுவலகம் முன் குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடிநீர் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.600-லிருந்து ரூ.2820 ஆக உயர்த்தியதைக் கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எல்.ஆர்.சங்கரசுப்பு, சி.முருகன், டி.கண்ணன் தாலுகா செயலாளர் (பொறுப்பு) சி.முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.நாகராஜ், ஏ.முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரில் பழுதடைந்துள்ள பேவர் பிளாக் சாலைகள், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் மற்றும் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தப்பட்டது. பின்பு இக்கோரிக்கைகள் அடங்கிய மனு நகராட்சியில் அளிக்கப்பட்டது. தாலுகா குழு உறுப்பினர்கள் வி.என்.ராமராஜ், வி.ராஜேந்திரன், ஏ.சி.காமுத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x