Published : 25 Jan 2021 03:17 AM
Last Updated : 25 Jan 2021 03:17 AM

தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் நெல்லை கருத்தரங்கில் தீர்மானம்

பேராசிரியர் தொ.பரமசிவன் உருவப்படத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

பேராசிரியர் தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடை பெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி அரசு அருங் காட்சியகத்தில் ‘தமிழ்ப் பண்பாடு தொல்லியல் மானுடவியல் நோக்கில் பேராசிரியர் தொ.பரமசிவன்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை வகித்தார். பொதிகை தமிழ்ச் சங்க தலைவர் கவிஞர் பேரா வரவேற்றார்.

பேராசிரியர் தொ.பரமசிவன் உருவப் படத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி திறந்து வைத்து பேசினார்.

தொடர்ந்து மூன்று அமர்வுகளாக கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் அமர்வில் சுப.சோமசுந்தரம் தலைமையில் எழுத்தாளர் நாறும்பூநாதன் ‘நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் தொ.ப’ என்ற தலைப்பிலும், 2-வது அமர்வில் பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் சவுந்தரமகாதேவன் ‘தமிழ் பண்பாட்டியல் நோக்கில் தொ.ப’ என்ற தலைப்பிலும், மூன்றாவது அமர்வில் திருக்குறள் இரா.முருகன் தலைமையில், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ‘தொல்லியல் நோக்கில் தொ.ப.’ என்ற தலைப்பிலும் பேசினர்.

‘தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும். திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடைய நல்லூர் மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் பா.வேலம்மாள் நிறைவுரை யாற்றினார். கலை யாசிரியர் க.சொர்ணம் நன்றி கூறினார்.

கருத்தரங்கில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவ ,மாணவிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x