Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM
திருக்கோவிலூர் அருகேயுள்ள நெடுமுடையான் கிராமத்தில் சிலர் கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
டிஎஸ்பி ராஜூ மேற்பார்வையில் திருக்கோவிலூர் போலீஸார் நேற்று அப்பகுதியில் கள்ளத் துப்பாக்கி தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் (30), ஏழுமலை (51), ஐயப்பன் (33), சிவலிங்கம் (40), ராஜா (55), முத்துலிங்கம் (42), ராஜா (51), சக்திவேல் (69) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் சிவலிங்கம் மற்றும் சக்திவேல் ஆகியோர் உரிய அனுமதியின்றி கள்ளத் துப்பாக்கிகள் வைத்தி ருப்பது தெரிய வந்தது.
அவர்கள் அதைக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப் பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT