Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் த.ரத்னா தலைமையில் காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் தெரிவித்தது:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், நெல், கடலை, மக்காச் சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள முந்திரியில் அதிக பூச்சி தாக்குதல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் என்.செங்கமுத்து: நிகழாண்டு நெல் அறுவடைக்கு தயாராக இருக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன்: புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், மற்ற பயிர்களுக்கு உரிய இழப் பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் விவசாயிகள் செய்த பயிர்க் காப்பீடு திட்டத் தில் கூடுதலாக நிவாரணம் கிடைக்க ஆட்சியர் முயற்சி செய்து, வாங்கித் தர வேண்டும்.
தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சி யர், கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT